மோடி.. இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார் !!

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியமைக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்தியப்பிரதமர் நரேந்திர  மோடி பாராட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டை, இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு  வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளனர்.

இந்த ராக்கெட்டில் 690 கிலோ எடைகொண்ட ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் மற்றும் ‘கலாம் சாட்’ என்ற செயற்கை கோள் ஆகியன பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அந்தவகையில் ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கை கோள் பூமியை கண்காணிக்கவும், ‘கலாம் சாட்’ செயற்கை கோள் ஹாம் வானொலி சேவைக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் இவ்விரு செயற்கைக்கோள்களும் வெற்றிகமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் 32 ராக்கெட்களை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியமைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், “திறமை வாய்ந்த இந்திய மாணவர்களின் கலாம்-சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புவிசுற்றுவட்டப்பாதையில் 4 ஆவது  நிலையை பயன்படுத்தி செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா’ என மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.