இந்தப்படம் பிரபுதேவாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்!!

சார்லி சாப்ளின் படத்தின் 2ஆம் பாகத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ளார்.
இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்துமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதா- சர்மா கூட்டணியில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகியுள்ள இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

குறித்த படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன மச்சான் பாடல் அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால் படத்துக்கும் சிறந்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்குமென படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் பிரபுதேவா, படங்கள் இயக்குவதனை கைவிட்டு விட்டு, தற்போது நடிப்புத் துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் குறித்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்ப்பதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.