தமிழர்கள் போராட்டத்தின் மூலம் சம உரிமை பெறமுடியும்!

கேப்பாபிலவு இராணுவ முகாமை நிலை நிறுத்துவதா அல்லது இராணுவ முகாமை அகற்றுவதா என்று பார்த்தால் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை இருக்கிறது என்றால் இராணுவ முகாமை அகற்ற வேண்டும்.

தமிழர்கள் இலங்கையில் வாழலாம் சம உரிமை கிடையாது என்றால் இராணுவ முகாமை அகற்றத் தேவையில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது இராணுவ முகாமை அகற்றுவதற்கு பின்னிற்கிறார்கள் என்றால் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடையாது.

எனவே போராட்டம் ஒன்றின் மூலம் தான் இதனை பெறமுடியும் என்று ஐனநாயக வழியில் போராடினால் முகாமின் அருகில் இருந்து போராட நீதிமன்றம் தடை. அந்தப் பகுதி தமிழ் மக்கள் எங்கு போவார்கள்.


இதனை அரசு தொடக்கம் எவரும் கவனத்தில் எடுக்கவில்லையே. கவனத்தில் எடுப்பதற்கு எத்தனை சந்ததி தாண்டுமோ தெரியவில்லை. அன்று தமிழர் சக்தி உயரும் என்பது மட்டும் தெரிகிறது.

-து.செல்வா-
  26.01.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.