உத்தர தேவி கொழும்பிலிருந்து நாளை ஆரம்பம்!

கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை உத்தர தேவி ரயில் சேவையில் புதிய ரயில் வண்டியை ஈடுபடுத்தும் அங்குராப்பண நிகழ்ச்சி நாளை இடம்பெறவுள்ளது.


அன்றைய தினம் காலை ஆறு மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் வண்டி புறப்படும். இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

வடக்கு, தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் புதிய ரயில் வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படுவது சிறப்பம்சமாகும். இந்த ரயில் வண்டி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டது. வாயு சீராக்கி வசதி கொண்ட முதலாம் வகுப்பு பெட்டியும் இரண்டாம் வகுப்பு பெட்டியும் அதில் அடங்குகின்றன. மொத்தமாக 724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கலாம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.