மதுரோ அறிவிப்பு! ஆயுத போராட்டத்தை எதிர்கொள்ளவும் தயார்!

ஆயுத போராட்டத்தை எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாக வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாத்தியமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இராணுவ பயிற்சிக்கான அறிவிப்பையும் ஜனாதிபதி விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

மேலும், தமது தாயகத்தை விரும்பும் எவராக இருப்பினும் அதனை பாதுகாப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிரிகளை எதிர்கொள்வதற்கு வலுவாக செயற்படுமாறும் அவர் இராணுவத்தை வலியுறுத்தியுள்ளார்.

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ, அண்மையில் தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்தார். இதனை அமெரிக்கா, கனடா, பிரேஸில், ஆர்ஜன்டீனா உள்ளிட்ட சர்வதேச அரசாங்கங்கள் பலவும் வரவேற்றன.

கெய்டோவிற்கு அமெரிக்கா ஆதரவை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொள்வதாகவும் மதுரோ அறிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலை புறக்கணித்தமையால், அங்கு 46.1 வீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இதனால், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நிக்கோலஸ் மதுரோ 58 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.

எனினும், இவரது வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, நிக்கோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தியும், புதிய தேர்தலை நடத்தக் கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேசமும் வெனிசுவேலாவில் வெளிப்படையான தேர்தலை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.