‛பயிற்சியாளர் பணியில் ஆண், பெண் பேதம் கிடையாது’

ஆஸ்திரேலியாவில் நடைெபற்று வரும், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, லுாகாஸ் பொய்லி, கனடாவின் மிலோஸ் ரவோனிக்கை, வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

லுாகாஸ்,24 வெற்றி பெற்றதை அடுத்து, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த, அவரது பயிற்சியாளரும், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையுமான, பிரான்சை சேர்ந்த, அமெலி மயுரஸ்மோ, 39 மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். லுாகாஸை பார்த்து கை அசைத்து, ஆர்ப்பரித்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆண் வீரரான லுாகாஸ், பெண் பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது குறித்து,  போட்டி வர்ணனையாளர், லுாகாஸிடம் கேள்வி எழுப்பினார். 
அப்போது, லுாகாஸ் பதில் அளிக்கையில், ‛‛ பயிற்சியாளரில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. யாரிடம் பயிற்சி பெறுகிறோம் என்பதை விட, நமக்கு பயிற்சி அளிப்பவரிடம் என்ன திறமை உள்ளது என்பதே முக்கியம். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்தவர், அமெலி. 
அவருக்கு, டென்னிஸ் பற்றி என்னை விட அதிகமாக தெரியும். அவரிடம் பயிற்சி பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கு, பெண் பயிற்சியாளர் பயிற்சி அளிப்பதில் எந்த தவறும் கிடையாது. திறமை எங்கு உள்ளதோ அதை பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம்’’ என அவர் கூறினார்.
லுாகாஸின் கருத்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் இந்த பேட்டி, விளையாட்டு துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.