அமைச்சர் ஜெயக்குமார் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை!

அரசாங்கத்தினால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும்,
உடனடியாக பணிக்கு திரும்புமாறும் அரச ஊழியர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு அரசு என்பது மக்கள் நலப் பணிகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தும் ஒரு அமைப்பாகும். அரசின் முதன்மை நோக்கம் மக்கள் பணியே.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்திய போது பணப்பயன் 1.10.2017 முதல் வழங்கியதால் எற்பட்ட ஊதிய நிலுவை, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் போன்றவை அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுத்த இயலாது என தெரிவித்த பின்பும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் கடந்த 22 முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இச்சங்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் யாவும் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கி, சில தீவிரமான வழிமுறைகளை அவர்கள் தற்போது கடைபிடிக்கக் தொடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

இவர்களின் சில கோரிக்கைகளை ஏன் நிறைவேற்ற இயலாது என்பதை பொதுமக்களும், நடுநிலையான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்புகின்றனர்.

இது முற்றிலும் தவறான செய்தியாகும். இவர்களின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்போடு இருப்பதுடன், அரசின் நோக்கம் மக்கள் நலம் காப்பதே என்ற உண்மை.

எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வளர்ச்சிப் பணிகளை அரசு தான் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்து, தற்போதைய நிதி நிலையில், அரசின் நிர்வாக முன்னுரிமையைக் கருத்தில்கொண்டு, இதுபோன்ற தேவையற்ற போராட்டத்தை தூண்டி விடும் சங்கங்கள் வீசும் சதி வலையில் விழாமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

Powered by Blogger.