வரலாற்றில் இனப் படுகொலை நினைவு நாள்!
ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நடந்த மாபெரும் இனப் படுகொலை நினைவுகள்!
ஆசிஃபா
1933ஆம் ஆண்டில், ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் தொடங்கிய இனப் படுகொலை, 1945ஆம் ஆண்டில் நாஜிக்களின் வீழ்ச்சியில் முடிவு பெற்றது. வரலாற்றில் நிகழ்ந்த மிகக் கொடுமையான இனப் படுகொலையாக இது கருதப்படுகிறது. இன்று சர்வதேச இனப் படுகொலை நினைவு நாள் (International Holocaust Remembrance Day).
மூன்றில் ஒரு பங்கு யூதர்கள் கொலை
1941 செப்டம்பர் மாதத்தில், வெறும் இரண்டு நாட்களில் 33,000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த இனப் படுகொலையின்போது, அந்நாட்டில் வாழ்ந்த மூன்றில் ஒரு பங்கு யூத மக்கள் கொல்லப்பட்டனர்.
1933 முதல் 1945 வரை 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்களில், ஏறத்தாழ 6 மில்லியன் பேர் யூதர்கள். ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த, ஒன்பது மில்லியன் மக்களில், மூன்றில் இரு பங்கு மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர, இந்த இனப்படுகொலையில், ஹிட்லருக்கு அரசியல் மற்றும் மத எதிரிகள், ஊனமுற்றோர், மாற்றுப் பாலினத்தவர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
குழந்தைகளை வைத்துப் பரிசோதனை
ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்ததைப் பதிவு செய்யும் முன்பே கொலை செய்யப்பட்டனர். பிறந்த குழந்தைகளைத் தாயிடம் இருந்து பிரித்து வைத்து, எத்தனை நாட்களுக்கு வாழ்கிறது என்று பார்ப்பது முதல் பல ஆய்வுகள் பிறந்த குழந்தைகளை வைத்து நடத்தப்பட்டன.
விஷ வாயு
கொலை செய்வதற்கான விஷ வாயுக் கிடங்குகளில் முதலில் கார்பன் மோனாக்சைடு பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, சைக்லான் பி என்ற பூச்சிக்கொல்லி. இவர்களை அந்த அறைக்குள் அனுப்பிய பின்னர், கதவுகள் இறுக அடைக்கப்பட்டு, சுவர்களுக்கு இடையில் சைக்லான் பி மாத்திரைகள் போடப்படும்.
உள்ளே போவதற்குள்ளாகவே தான் சாகப்போகிறோம் என்று அறிந்து பயந்துவிடக் கூடாது என்பதால், அந்த அறை வாசலில், “Baths and Disinfecting Rooms” என்று எழுதப்பட்டிருக்கும். உள்ளே சென்ற அனைவரும் ஏறத்தாழ 20 நிமிடங்களில் இறந்து போவார்கள்.
இனப் படுகொலையின்போது, நாஜிக்கள், யூதர்களிடம் இருந்து திருமண மோதிரங்கள், கைக்கடிகாரம், தங்கம், கண்ணாடி, விலைமதிப்பில்லா கற்கள் என முடிந்ததை எல்லாம் திருடிக்கொண்டார்கள்.
உலக நாடுகளின் மனசாட்சி
ஹிட்லர், யூத அகதிகளை அமெரிக்கா, பிரிட்டன் முதலான 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதித்தார். ஆனால், அந்நாடுகள் அவர்களை ஏற்க மறுத்துவிட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை