மறைந்தாலும் மங்காத மறத்தமிழிச்சி நானென்று!

அன்னை தமிழவளின்
ஆசியுடன் என் பயணம்
அகரத்தில் தொடர்ந்தேன் அன்று

ஆண்டுகள் ஒவ்வொன்றும்
சிறப்பாய் மிளிர்ந்திடவே
கல்வியில் நானனங்கு
கால்த்தடங்கள் பொறித்துவந்தேன்

பள்ளியில் சிறு சிட்டாய்
மழலையாய் கவி வடித்து
கொஞ்சும் என் தமிழை
அரங்கில் தவழவிட்டேன்

கவிகள் பேச்சுக்கள்
கட்டுரை கதைகளென
விவாதமும் அரங்கியலும்
தாயே உன் துணையால்
வாகைகள் சூடிக்கொண்டேன்

ஏற்றிவிட்ட என் தமிழை
ஏங்கியின்று பார்க்கின்றேன்
வேற்றான் மொழியிலென்
உயர் கல்வி தொடர்கையிலே

சட்டங்கள் விதிமுறைகள்
பட்டங்கள் பெறுவதற்காய்
கடமைக்காய் கல்விக்காய்
மணிநேரப்பொழுதுகள்
புறத்தால் பிரிகின்றேன்
தாயே என் தமிழை

அகத்திலே என் தமிழும்
நாவினிலே என் மொழியும்
ஓடும் குருதியிலே
தமிழ்த்தாயின் உணர்வுகளும்
உயிர் மூச்சோடு உறைந்திருக்கும்

உடலும் உயிரும்
பிரிகின்ற நாள்வரையில்
செப்புவேன் நானென்றும்
மறைந்தாலும் மங்காத
மறத்தமிழிச்சி நானென்று....

வன்னியூர் மகள்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.