புதிய விவசாய காப்புறுதி!!
கிளிநொச்சி இரணைமடுக் குள விவசாய சம்மேளனத்தினருக்கும், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள் பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி அமையப்போகும் குழு தொடர்பிலும் ஆராயப்பட்டது.
கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு குளத்துக்கு நீர் வரும் பகுதிகள் போன்றவற்றில் கடந்த 50 வருடங்களில் இடம்பெற்ற மழைவீழ்ச்சி மற்றும் குளத்தின் நீர் சேமிப்பு தொடர்பான முழுமையான அறிக்கையைக் பெற்று விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆளுநர் கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.
கடந்த பருவத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்திருப்பதன் காரணமாக குளத்தின் நீர் கொள்ளளவு அதிகமாக காணப்படுவதால் அதனை சரியான ரீதியில் முகாமைத்துவம் செய்வது தொடர்பில், தமக்கு பயிற்சிகள் வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளுக்கும் இதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.
இரணைமடுக் குளத்தில் முதல் ஐந்து வருடங்கள் நீர் நிரம்புவதுடன், அடுத்த இரு வருடங்கள் நீர் குறைவதோடு அதற்கு அடுத்த வருடத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கு மீண்டும் நிரம்பி வரும் சுழற்சி நடைமுறையே ஆரம்பம் தொட்டு காணப்படுவதாக விவசாயிகள் ஆளுநருக்கு எடுத்துக் கூறினர்.
விவசாயிகளின் இந்தக் கருத்துக்களை செவிமடுத்த ஆளுநர், இரணைமடுக் குளத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முடியாமற்போகும் மக்களின் பொருளாதரா நிலைமையைத் தொடர்ந்தும் பேண்தகு நிலையிலேயே வைத்துக் கொள்ள சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதோடு, இது தொடர்பில் காப்புறுதி நிறுவனங்களுடன் பேச்சுக்கள் மேற்கொள்வதனூடாக புதிய விவசாயக் காப்புறுதியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய முடியும் எனத் தெரிவித்தார் என்று வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை