விசேட கலந்துரையாடல்!
நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பல்வேறு விடயங்கள் குறித்து ஆண்டுக்கொருமுறை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி யோசனைகளை வழங்கி வருகிறார்.
அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி தல்காடோரா அரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 17 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியதோடு, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “பெற்றோர்கள் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியான பலமும் திறமையும் உண்டு. அதை சரியான வகையில் நீங்கள் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.
அறிவுத்திறனை விரிவாக்கம் செய்யும் வகையிலும் புதிய படைப்புகளுக்கான உந்துசக்தியாகவும் தொழில்நுட்பத்தை மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், விளையாட்டுத்துறையை நீங்கள் மறந்து விடக்கூடாது“ எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை