அமெரிக்காவை உலுக்கவுள்ள கடும்பனி!

அமெரிக்க மாநிலங்களான மினசோட்டாவிஸ்கொன்சின் மற்றும் தெற்கு டகோட்டா ஆகியவை சைபீரியாவில் நிலவுவதை போன்ற கடும் குளிர் காலநிலையை எதிர்கொள்ள நேரிடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளிலேயே அதிகமான குளிர் இந்த வாரம் அமெரிக்காவை வாட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேற்கு மினசோட்டாவில் -54C (-65F) குளிர் காற்று வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் வட்டத்திலிருந்து வரும் ஒரு துருவ சுழல் வாரத்தின் நடுவில் அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை தாக்கக்கூடுமென அமெரிக்க தேசிய வானிலை சேவை எதிர்வுகூறியுள்ளது.
இக்காலநிலை காரணமாக இப்பகுதிகளில் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு மக்கள் முகம்கொடுக்க நேரிடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிக்காகோ நகரம் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக கடும்பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக வான்வழி மற்றும் தரைவழி போக்குவரத்து பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் மூடப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
வாகன ஓட்டுனர்களை அதீத கவனத்துடன் செயற்படுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களை இயன்றவரை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.