ஜேர்மனி அம்மா உணவக அனுசரனையில் கிளிநொச்சியில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

கடந்த வாரங்களில்  தாயக மக்கள்  பட்ட இயற்கை அணர்த்த துயரமும் தற்போது சிறிதளவு மீண்டு வரும் வேளையில் கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட கிணறுகளை இறைத்து சுத்தப்படுத்தும் செயற்றிட்டத்தை
விரிவுபடுத்துவதற்காக ஜேர்மனியில் உள்ள அம்மா உணவகத்தின் அனுசரனையில் ஒரு தொகுதி நீர் இறைக்கும் இயந்திரங்கள் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூலமாக கிளிநொச்சி  மாவட்டக்கிளையிடம் கையளிக்கப்பட்டது.

நாளை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்திகரிக்கும் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகளும்  இன்னுமொரு அணியாக களமிறங்குகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகள் இறைக்கப்படவேண்டி இருப்பின் தொடர்புக்கள் ஏற்படுத்த தொலை நகல் இலக்கம் வழங்கினர்.

ஜெகா - 0771708617
Powered by Blogger.