ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம்: உ.பி. பெண்கள் கோரிக்கை!

தங்களது திருமணத்தைப் பதிவு செய்யவும், சமூகத்தில் அங்கீகரிக்குமாறு செய்யவும் பதிவுத் துறையை நாடியுள்ளனர் உத்தரப்
பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரைச் சேர்ந்தவர்கள் தீப்சிகா மற்றும் அபிலாஷா. இவர்களில் ஒருவரது வயது 21. மற்றொருவரின் வயது 26. கடந்த ஏழு ஆண்டுகளாக, இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களது தொடர்பு தெரிந்து, இரு பெண்களின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இருவருமே தங்களது திருமண வாழ்க்கையை ஏற்கவில்லை. ஒருவரையொருவர் மறக்க முடியவில்லை என்று கூறி, திருமண வாழ்வை உதறினர். தங்களது கணவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்றபின்பு, ஒன்றாகச் சேர்ந்தனர்.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதியன்று, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதனைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய முடியவில்லை.
கடந்த செப்டம்பர் மாதமே ஒருபாலின உறவுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஆனால், இதுவரை ஒருபாலினத் திருமணத்துக்கான நெறிமுறைகள் ஏதும் அரசினால் வகுக்கப்படவில்லை. இதனால், இந்த திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தார் ஹமிர்பூர் சார்புப் பதிவாளர் ராம்கிஷோர் பால். “ரத் காவல் நிலையத்தின் பாதுகாப்போடு இரு பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வெள்ளியன்று இருவரும் மாலை அணிந்தவாறு அலுவலகம் வந்தனர்” என்று அவர் கூறினார்.
ஒருபாலினத் திருமணம் குறித்த சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை என்றாலும், இவ்விரு பெண்களும் இணைந்து வாழ்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் இவர்களது வழக்கறிஞர் தயா சங்கர் திவாரி.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.