காலை உணவின் மகிமை! – Dr. திருமதி.பிரதீபனா செல்வகரன்.























உடலின் தசையின் அளவை (Muscle Mass) கூட்டும் காலையில் எடுக்கப்படும் புரத உணவானது உடலினால் அதிகளவில் தசையின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும்.
இது ஒருவர் உடல் வலுப்பயிற்சியினால் பெறுவதிலும் அதிகம்.


கொழுப்பைக் கரைக்கும் ஒருவர் இரவில் 12 மணித்தியாலங்கள் உணவின்றி இருப்பதனால் அவரின் குருதியில் இன்சுலின் அளவு உயர்வாக இருக்கும். இன்சுலின் கொழுப்பைத் தொகுக்கும் ஒரு ஓமோன். இன்சுலின் அளவைக் குறைந்த நிலையிற்பேண நாம் காலையில் உண்ண வேண்டும். மேலும் அவ்வாறு உண்ணாதிருக்கும் ஒருவர் “நொறுக்குத் தீனிகளை” அதிகம் எடுக்கவேண்டியிருக்கும். அவை அதிகரித்த இன்சுலின் உள்ள நிலையில் கொழுப்பாகவே மாற்றப்படும்.


அன்றைய நாளில் வினைத்திறனுடன் தொழிற்பட உதவும்.மூளைக்குக் குளுக்கோஸ் போதியளவிற் கிடைக்கும் போதே அது இயல்பாகத் தொழிற்படும்.
எவற்றைக் காலை உணவாக உண்ணலாம்?


புரதத்திற்காக – முட்டை, பருப்புவகை,கடலைவகை
சிக்கலான காபோவைதரேற்று மற்றும் நார்ச்சத்துக்காகபழங்கள், தவிடு நீக்காத தானியங்களால் தயாரிக்கப்பட்டஉணவு.
விற்றமின்கள் மற்றும் கனியுப்புகளுக்காக – பால், பழங்கள்,பச்சைக் காய்கறிகள் தினமும் ஆரோக்கியமான காலை உணவை உண்டு நலம்பெறுவோம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.