குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் நாமல் குமார

போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாம் இராணுவத்தில் இணைந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, தண்டனை வழங்கப்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

நாமல் குமார என்பவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராணுவத்தில் இணைந்து, பயிற்சியின்போது தப்பியோடியவர் என சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வரக்காபொலயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நான் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து படைப்பிரிவுகளில் பயிற்சிப் பெற்றதாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் உண்மையானவை.
அதற்காக வழங்கப்படுகின்ற தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன். அதேநேரம், நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்வதற்காக இடம்பெற்ற சூழ்ச்சியும் உண்மையானது“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.