தை பிறந்தேனும் வழி பிறக்குமா?


பிறந்­துள்ள புத்­தாண்­டி­லா­வது பன்­னாட்­டுச் சமூ­கம் எம் மீது கரி­சனை கொண்டு எங்­கள் பிரச்­சி­னைக்­குத் தீர்­வைக் காண­வேண்­டும். இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.


வவு­னியா வீதி அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­துக்கு முன்­பாக சுழற்சி முறை­யி­லான உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­களே இவ்வாறு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்­கள்.

‘நாம் எமது பிள்­ளை­க­ளைத்­தேடி போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றோம். இலங்கை அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ருமே எங்­க­ளைக் கைவிட்­டு­விட்­டார்­கள். நாம் பன்­னாட்­டுச் சமூ­கத்­தையே நம்­பி­யுள்­ளோம். பிறந்­துள்ள புதிய ஆண்­டி­லா­வது பன்­னாட்­டுச் சமூ­கம் எம் மீது கரி­சனை செலுத்தி எங்­கள் கண்­ணீ­ருக்­குத் தீர்வு காண­வேண்­டும்’ என்று அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவர்­க­ளது போராட்­டம் இன்­று­டன் 680 நாள்­களை எட்­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.