தட்டுவன்கொட்டி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி!

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பலபகுதிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது. இவர்களுக்கு உதவும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் வாயிலாக கடந்த 31/12/2018 ம்
திகதியன்று கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி, ஆணையிறவு மற்றும் குமாரபுரத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை மீன்பிடி போக்குவரத்து சிறுகைத்தொழில் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் வழங்கிவைக்கப்பட்டன.

உதவிப் பொருள்களை வழங்கிவைத்த பின்னர் ஊடகங்களுக்கு முன்னாள் அமைச்சர் தெரிவித்தவை வருமாறு:-

மேற்படி வேலைத்திட்டத்திற்கு எமது புலம்பெயர் உறவுகளினால் உருவாக்கப்பட்ட International Medical Health Organization என்ற அமைப்பினர்களால் நிதி உதவி வழங்கப்பட்டது. அந்தவகையில் குறித்த அமைப்பின் உறுப்பினர்களான அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது கிளிநொச்சி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் குறித்த வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவி செய்த புனர்வாழ்வு அளிக்கப்பட முன்னாள் போராளிகளான பண்டிவிரிச்சானை சேர்ந்த ரவி மற்றும் வேந்தன் அவர்களுக்கும், கிளிநொச்சியில் இயங்கிவரும் மக்கள் நலன் காப்பகத்தின் உறுப்பினர்களான யூட்சன் மற்றும் ரமேஸ் அவர்களுக்கும், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றோஜன் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் குறித்த பகுதியின் இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. மிக விரைவாக குறித்த உதவி திட்டம் எனது மாணவச் செல்வங்களுக்கு வந்தடையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.