மர்மமாக உயிரிழந்த இலங்கை பெண்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 32 வயதான உமயங்கி வீரசிறி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாபோலி நகரத்திலுள்ள வீடொன்றில் பணியாற்றி வந்த உமயங்கி, அதே வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது கணவருடன் நாபோலி நகரத்தில் பொலிஸிகோ பிரதேசத்தில் தங்கியிருந்து பணி செய்து வருகின்றார். இந்த பெண் பணி செய்வதற்கு வருகைத்தராமையினால் அவர் தங்கியிருந்த அறையில் சென்று வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளார்.

அங்கு உமயங்கி தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட இத்தாலி பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அன்று காலை குறித்த பெண்ணின் கணவர் அந்த அறையில் இருந்து செல்வதனை வீட்டடின் உரிமையாளர் அவதானித்துள்ளார். எனினும் தற்போது அவர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 8 வருடங்களாக இந்த பெண் இத்தாலியில் பணி செய்து வருகின்ற நிலையில் கடந்த வருடம் மே மாதம் திருமணம் செய்துள்ளார். ஒக்ஸ்ட் மாதம் கணவருடன் அவர் இத்தாலி சென்றார் என உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.

தனது சகோதரி அவரது கணவருடன் நாபோலி நகரத்தில் உள்ள வீட்டில் ஒன்றாக பணி செய்ததாகவும், சகோதரியின் மரணத்தின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும், சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணம் கொலை என சந்தேகிப்பதாக நபோலி நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.