பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில்  முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


இந்த கலந்துரையாடல் எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் நாட்டின் பல இடங்களில் பல்வேறுப்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பல தோட்டங்களிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்ததுடன், கொழும்பு-புறக்கோட்டை ரயில் நிலையத்தில் மலையக இளைஞர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.