விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை

விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றினைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தால் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் குறைந்தது. இரண்டு வாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்று அந்த நிலைமை அப்படியே தலைகீழாவிட்டது. இவர்களின் செயற்பட்டால் நாடு இரண்டு வருடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. எவ்வாறாயினும், நாம் எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வோம். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்கள் முட்டாள் அல்ல.
இதற்கான பாடத்தை அடுத்த தேர்தல்களில் அவர்கள் வழங்குவார்கள். நாம் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் ஸ்திரமான நிலையில் இருக்கின்றோம்.
அத்தோடு, விசேட நீதிமன்றங்களை அமைக்க நாம் தீர்மானிக்கவில்லை. மாறாக எங்கு அதிக குற்றங்கள் இடம்பெறுகின்றதோ அங்கு நீதிமன்றங்களை அமைத்து, ஒரு நாளில் வழக்காடத் தான் தீர்மானித்திருந்தோம்.
மாறாக விசேட நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Powered by Blogger.