வளர்மதியின் 3ம்கட்ட __நிதி உதவித்திட்டம்

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக வெளிநாட்டு வாழ் உறவுகளால் வெள்ள அனர்த்த பேரழிவிற்காக  வழங்கப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சார்பாக வளர்மதி சனசமூக நிலையத்தினரால் இன்று 03 ஆவது கட்டமாக  வழங்கப்பட்டது.

 முல்லைத்தீவு மாவட்டத்தில்  கடந்த வெள்ளப்பேரழிவால்   முற்றாக வீடுகள்  சேதமடைந்த 86 குடும்பத்தினருக்கும் ரூபா 5,000 படி நிதியுதவி (430000)வழங்கப்பட்டுள்ளது . இந்நிகழ்வானது இன்று  (08.01.2019) காலை 10:00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலர் ம .பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் முல்லை  மாவட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் திரு லிங்கேஸ்வ்ரன் பிரதம விருந்தினராகவும்   உதவித்திட்டப் பணிப்பாளர் , கணக்காளர் , நிர்வாக அதிகாரி மற்றும் வளர்மதி நிர்வாக   குழுவினரும் ,சனசமூக நிலையத்தின் உப அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து  சிறப்பித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.