புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழு நாளை கூடுகிறது!

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல், குழு நாளை (9.1.2019) கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது அரசியலமைப்புச் சபை அமர்வுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படவுள்ளதாகவும், சில நேரங்களில் நிபுணர்களின் வரைபு வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வரைபில்  ‘ஏக்கிய ராஜ்ஜிய’ அதாவது  ‘ஒருமித்த நாடு’ என்று குறிப்பிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக சில அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகிறன.
அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கடந்த காலங்களில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
புதிய அரசியல் யாப்பின் ஊடாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமென அரசாங்கமும் குறிப்பிட்டிருந்த நிலையில், தமிழ் பிரதிகளின் வேண்டுகோளை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில் குறித்த செயற்பாடு நாட்டை பிளவுபடுத்துவதற்கான செயல் என்று மகா சங்கத்தினர் எதிர்ப்பை வெளியிட்டுவருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.