முல்லைத்தீவு - வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நிதியுதவி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரசேத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க மட்டுவில் தெற்கு சாவகச்சேரி வளர்மதி சனசமூக நிலையத்தினரால் தலா ஜந்தாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்களும், மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர் மட்டுவில் தெற்கு சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கி வைத்தனர்.
Powered by Blogger.