வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: சி.வி.கே.


தமிழ் மொழி பேசுபவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என, வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று (புதன்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கை தேசிய இனத்தினுடைய வரலாற்றை புரிந்துக் கொண்ட, ஆராய்ச்சிசெய்த ஒருவர் வட. மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வடக்கு மாகாணத்தின் உணர்வுகள், தேவைகள், அபிலாஷைகள், அரசியல் இலக்குகள் என்பவற்றை புதிய ஆளுநர் நன்கு அறிந்துள்ள நிலையில் அதற்கேற்ப அவர் செயற்படுவார்” எனத் தெரிவித்தார்.
Powered by Blogger.