வடக்கு- தெற்கை இணைக்க ‘அணிலாக’ செயற்படுவேன்


வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழிலுள்ள வட. மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு வெறுமனே ஒரு ஆளுநராக மட்டுமின்றி, வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு அடிப்படையாக இருக்கும். நான் மண்ணின் மைந்தன் இல்லையென்றாலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன். நான் பேச்சு சாமர்த்தியம் கொண்டவரல்லர். மாறாக வேலை செய்யவே நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.