சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி மருந்து: மன்னார் மக்கள் விசனம்

காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுவன் ஒருவனுக்கு ஊசி மாற்றி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த சம்பவத்தை மூடி மறைக்க மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஊசி ஏற்றப்பட்ட குறித்த சிறுவன் ஊடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வேறு ஒரு நபருக்கு போட இருந்த ஊசியை தவறுதலாக இச் சிறுவனுக்கு ஏற்றப்படுள்ளதாக வைத்தியர்களால் கூறப்பட்டதாகவும் அச் சிறுவனின் தந்தை  இன்று (புதன்கிழமை) எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் இவ்வாறான செயல்களை பலர் சுட்டி காட்டிய போதும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லை என மன்னார் மாவட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.