சீன இளவேனிற்கால புத்தாண்டுக்கான நேரக் கணிப்பீடு ஆரம்பம்!

சீனாவில் வருடாந்தம் இளவேனிற்கால பண்டிகையாகவும், சந்திர புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வரும் காலா (Gala) இளவேனிற்கால பண்டிகைக்கான ஆயத்தப்பணிகளும், ஒத்திகை நடவடிக்கைகளும் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான நேரக் கணிப்பீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சீன ஊடக குழுவினர் அதற்கான நிகழ்ச்சி தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சுமார் 700 மில்லியன் பார்வையாளர்கள் சர்வதேச ரீதியாக சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களை காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாட்டங்களின் ஒருங்கிணைந்த மாபெரும் காட்சியாக எதிர்வரும் புதன்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
காலா பண்டிகை ஒத்திகைகள் இன்று நான்காவது கட்டமாக இடம்பெற்று வருகின்றது. சீன மத்திய தொலைக்காட்சி சேவையின் முதலாவது மாபெரும் கலையகத்தில் கொண்டாட்டங்களுக்கான நேரக் கணிப்பீடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், வருடாந்த சந்திர புத்தாண்டுக்கான ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீன பாரம்பரிய கலை நிகழ்வுகள், நடனங்கள், விவாத நிகழ்வுகள் மற்றும் பல்சுவை அம்சங்கள் இந்த நிகழ்வின் போது இடம்பெறவுள்ளன.
இதுதவிர நகைச்சுவை கலைஞர்களின் விசேட நிகழ்ச்சிகளும் இந்தமுறை இடம்பெறவுள்ளமையினால் பண்டிகை கொண்டாட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.