அமெரிக்க காங்கிரஸில் ட்ரம்ப் விசேட உரை!!

பல தசாப்தங்களாக நீடிக்கும் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு முடிவுகட்டுவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைக்கவுள்ளார்.

அரசாங்க முடக்கம் காணரமாக பிளவடைந்து காணப்படும் அமெரிக்க காங்கிரஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றவுள்ளார். இதன்போது, நாட்டின் அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றிணைந்து தீர்வு காணலாம் என்ற செய்தியை ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைக்கவுள்ளார்.

வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழைய பிரிவினைகள், காயங்களை குணப்படுத்தி புதிய கூட்டணியை கட்டியெழுப்பி, புதிய தீர்வுகளை காண்பதற்கும் ட்ரம்ப் அழைப்பு விடுக்கவுள்ளார்.

இதன்போது சீன வர்த்தக பேச்சுவார்த்தை குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் விளக்கமளிக்கவுள்ளார். இதேவேளை, வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு மாற்றீடா கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான வர்த்தக உடன்பாட்டை ஒப்புக் கொள்ளுமாறும் உறுப்பினர்களை வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.