பொது வேட்பாளரை ஆதரிக்கப் போவதில்லை – ஐ.தே.க. உறுதி!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இன்று (புதன்கிழமை) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி தேர்தல்களில் கடந்த காலத்தில் பொது வேட்பாளர்களை ஆதரித்து நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். எனவே, இம்முறை ஐ.தே.க. சார்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
ஐக்கிய தேசிய கட்சியானது பாரிய, பலம் மிக்கதொரு கட்சியாக விளங்குகிறது. நாம் தேர்தலுக்கு அஞ்சியவர்கள் அல்லர்.
எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயார். நாம் அதற்கான தயார்படுத்தல்களுடன், பலமாக ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகிறது.
வெகுவிரைவில் தேர்தலை நடத்துமாறு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோருகிறோம். அவ்வாறு தேர்தல் நடத்தினால், அதற்கு நாம் தைரியமாக முகங்கொடுப்போம்.
எந்தவொரு தேர்தலுக்கும் தயாரான போதிலும் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருகிறோம்.
கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் பொது வேட்பாளர்களை நிறுத்தி நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். எனவே, இம்முறை ஐ.தே.க. சார்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.