எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி?

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளது நாம் தமிழர் கட்சி. இதன் ஒருபகுதியாக, `தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக ஆண்களும் பெண்களும் போட்டியிடுவார்கள்' என அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதன் தொடர்ச்சியாக எந்தெந்த தொகுதிகளில் ஆண்களும் எந்தெந்த தொகுதிகளில் பெண்களும் போட்டியிடுவார்கள் என்ற பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 21 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதில் ஆண்களும் பெண்களும் தலா 11 மற்றும் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பட்டியலில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளனர்.
21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், திருவாரூர், ஒட்டப்பிடாரம், ஓசூர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை, குடியாத்தம், திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#seemannaam #tamilar #katchiparliament #election #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை