வரலட்சுமி காதல் சொல்ல ஆசைப்படுபவா் யாா்?

நடிகை வரலட்சுமி நடிகர் பிரபாஸ் மீது ஓரு கிரஷ் இருப்பதாகவும், காதலை சொல்வதென்றால் அது ‘பாகுபலி’ கதாநாயகனிடம்  கூறுவேன் எனக் கூறியுள்ளார்.

வரலட்சுமி கதாநாயகியை விட வில்லி கதாபாத்திரம் இவருக்கு சிறப்பாக பொருந்தியிருப்பதால்  சிறந்த வில்லிக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை வரலட்சுமி, “தெலுங்கு நடிகர் பிரபாஸ் மீது ஓரு கிரஷ் இருப்பதாகவும், காதலை சொல்வதென்றால் அது ‘பாகுபலி’ கதாநாயகனிடம் தான் சொல்வேன்” எனக் கூறினார்
நடிகை வரலட்சுமி தமிழில் ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் நடிப்பு சூறாவளியாக மாறியது.
தொடர்ச்சியாக ‘விக்ரம் வேதா’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.