மகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் !
"மகனின் கல்லூரி கட்டணத்தை செலுத்தவே நடிக்க வந்தேன்" என கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
கடந்த காலங்களில் பிரபல அரசியல்வாதியாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அரசியல் வாய்ப்பை இழந்தாலும் பட வாய்ப்பை பெற்றுள்ளார் இவர். இந்நிலையில் எல்.கே.ஜீ .படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தந்தையாக நடித்துள்ளார் நாஞ்சில் சம்பத். இப்படம் குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், பேசுவதற்கான வாய்ப்பு குறைந்ததால் நடிக்க வந்ததாகவும், தனது மகன் கல்லூரி கட்டணத்தை செலுத்த தயாரிப்பு நிறுவனத்தில் பணம் பெற்று தருவதாக ஆர்.ஜே.பாலாஜி கூறியதால் தான் நடிக்க சம்மதித்தேன் என்றும், தனது நடிப்பை பார்த்த அனைவரும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இதுவே நாஞ்சில் சம்பத் நடிக்கும் முதல் படம் !

கருத்துகள் இல்லை