கடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிக்கிறது!
கடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாம் பொறுப்பேற்றுக்கொண்டது கடன் சுமையில் இருந்த ஒரு நாட்டையாகும்.
நாம் நாட்டை பொறுப்பேற்கும்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையிலே காணப்பட்டது.
இப்போது என்ன நடந்துள்ளது? இந்த 4, 5 வருடங்களில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேனும் கடனை திருப்பிச் செலுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இன்னொருவர் செய்த பாவத்தை சுமக்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதனாலேயே, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு, வாழ்க்கைச் சுமையும் கூடியது.
எவ்வாறாயினும், இன்னொரு புறம் நாம் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கும் நிதிகளை ஒதுக்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.பெரும்பாலான நிதியை இவற்றுக்காக தற்போது ஒதுக்கி வருகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை