மன்னார் புதைகுழி- கார்­பன் பரி­சோ­தனை அறிக்கை வெளிவருவதில் சிக்கல்!


மன்­னார் புதை­கு­ழி­யில் இருந்து மீட்­கப்­பட்ட மனித எலும்­புக்­கூ­டு­க­ளின் மாதி­ரி­க­ளின் கார்­பன் ஆய்வு அறிக்­கை­களை வெளி­யி­டு­வ­தில் மேலும் தாம­த­மா­கும் என்று காணா­மற்­போ­னோர் பணி­ய­கம் தெரி­வித்­துள்­ளது. ‘5 மாதி­ரி­க­ளின் பரி­சோ­தனை நிறை­வ­டைந்த நிலை­யில் 6ஆவது மாதி­ரி­யில் உள்ள காபன் பரி­சோ­த­னைக்­கான மூலப்­பொ­ருள்­கள் போது­மா­ன­வை­யாக இல்லை. அத­னைச் சீர்­செய்து பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்த அமெ­ரிக்­கா­வின் பீட்டா நிறு­வ­னம் முயற்­சித்­துள்­ளது. அதற்கு போதிய கால அவ­கா­சம் தேவை. அத­னால் காபன் பரி­சோ­தனை அறிக்­கை­க­ளின் முடிவை வெளி­யி­டு­வ­தில் கால தாம­தம் ஏற்­ப­டும்’ என்று காணா­மற்­போ­னார் பணி­ய­கம் கீச்­ச­கத்­தில் தெரி­வித்­துள்­ளது. 6 மாதி­ரி­கள் அனுப்­பப்­பட்ட நிலை­யில் ஐந்து மாதி­ரி­க­ளின் காபன் அறிக்­கை­களே கிடைக்­கப்­பெற்­றன. அவை மன்­னார் நீதி­வான் நீதி­மன்­றப் பதி­வா­ள­ரி­டம் சட்ட மருத்­துவ நிபு­ணர் சமிந்த ராஜ­பக்­ச­வால் கைய­ளிக்­கப்­பட்­டன. எனி­னும் பீட்டா நிறு­வ­னத்­தி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நீதி­மன்­றுக்கு அறிக்கை கிடைக்­கப்­பெ­றும் போதே அதன் முடிவை நீதி­மன்­றம் வெளி­யி­டும் என்று நீதி­வான் குறிப்­பிட்­டி­ருந்­தார். இதே­வேளை அகழ்­வுப் பணி­யா­னது 149 ஆவது நாளாக நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.