மட்டக்களப்பில் சர்வதேச தாய்மொழித்தின நிகழ்வுகள் !!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்லடி மீன் இசைப் பூங்காவில் குறித்த நிகழ்வுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றன.
கல்லடிப் பாலத்தின் அருகில் அமைந்துள்ள ஒளவையார் சிலைக்கு கொழும்பு கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜ் மலர் மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைக் கோகிலம் மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தாய்மொழியின் தொன்மை பற்றி கம்பவாரிதி சொற்பொழிவாற்றினார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
மாநகர சபையின் கலைக் குழுத் தலைவர் வே. தவராஜா வரவேற்புரையையும் ‘தமிழ்மொழி இன்னும் இனியும்’ எனும் தலைப்பில் அடிகளார் ஏ.ஏ. நவரட்ணம் நவாஜி சொற்பொழிவாற்றியதோடு இன்னும் பல தமிழ்மொழி ஆர்வலர்களும் நிகழ்வுகளில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை