மஹிந்த இந்தியாவிற்கு விஜயம்!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


இந்தியா, பெங்களூரில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மஹிந்த அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள குறித்த கருத்தரங்கில், இரண்டாம் நாள் மஹிந்த உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்விஜயத்தின் போது, இந்தியாவிலுள்ள பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடலில் மஹிந்த ஈடுபடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள மஹிந்த தலைமையிலான குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருப்பரெனவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.