என்னைப் போல ஒவ்­வொரு இடத்­தில் ஒவ்­வொரு கதை­யைக் கூறு­கி­றார் மகிந்த!

மகிந்த ஒவ்­வொரு இடங்­க­ளி­ லும் ஒவ்­வொரு வித­மான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார். புதிய அர­ச­மைப்பு வேண்­டாம் என்று இங்கு வைத்­துச் சொன்­ன­வர், இந்­தியா சென்று அர­ச­மைப்­புத் திருத்­தம் வேண்­டும் என்­கின்­றார். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
தாம் ஆட்­சிக்கு வந்­த­தும் அர­ச­மைப்­புத் திருத்­தத்­தின் ஊடாகத் தமிழ்மக்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­டும் என்று இந்­தி­யா­வில் வைத்து மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தி­ருந்­தார். இது தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­தா­வது:
நாங்­கள் அன்று தொடக்­கம், அர­ச­மைப்­புத் திருத்­தம் வேண்­டாம், புதிய அர­ச­மைப்­புத்­தான் வேண்­டும் என்று கோரு­கின்­றோம். பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­ட­மும் எடுத்­து­ரைத்­துள்­ளோம். ஐ.நா. தீர்­மா­னத்­தி­லும் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
மகிந்த சொல்­லும் கார­ணம் ஏற்­றுக் கொள்ள முடி­யாது. புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கத்­தான் தீர்­வைக் காண­மு­டி­யும். அதன் ஊடா­கத்­தான் நாட்­டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்.
மகிந்த ஒவ்­வொரு இடங்­க­ளி­லும் ஒவ்­வொரு வித­மான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார். புதிய அர­ச­மைப்பு வேண்­டாம் என்று இங்கு வைத்­துச் சொன்­ன­வர், அங்கு சென்று அர­ச­மைப்­புத் திருத்­தம் வேண்­டும் என்­கின்­றார்.
அவர் தான் ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்கு, எமது நாட்டு மக்­க­ளை­யும் வெளி­நா­டு­க­ளை­யும் சமா­ளிப்­ப­தற்­கும் வௌ;வேறு இடங்­க­ளில் வௌ;வேறு வித­மான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்.
எந்த அரசு ஆட்­சி­யி­லி­ருந்­தா­லும், புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கவே தீர்­வைக் காணவே நாங்­கள் ஒத்­து­ழைப்­போம். அந்­தத் தீர்வு அர்த்­த­புஷ;டியாக இருக்­கும் பட்­ட­சத்­தில் அதற்கு ஆத­ர­வ­ளிப்­போம் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Hea
dlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.