அபிநந்தன் பதிலை வைத்து இணையத்தைக் கலக்கும் மீம்!!

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியப் போர் விமானி அபிநந்தன் நாடு முழுவதும் பாப்புலர் ஆகிவிட்டார்.
அபிநந்தன் வைத்திருப்பது போன்ற கிருதா மீசை போலவே பல இளைஞர்களும் மீசை வைத்துக்கொண்டு அலைகின்றனர். பாகிஸ்தானியர்களிடம் அபிநந்தன் பிடிபட்டதும், அவரிடம் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதை வீடியோவாகவும் எடுத்து சமூகவலை தளங்களிலும் பரப்பினர்.

பாகிஸ்தானின் மேஜர் ரேங்கில் உள்ள அதிகாரி ஒருவர், அபிநந்தனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற கேள்வி அபிநந்தனிடம் கேட்கப்பட்டது. அதற்கு, சாரி... மேஜர், அதை நான் உங்களிடத்தில் சொல்ல முடியாது என்று அபிநந்தன் பதில் கூறினார். விசாரணையில் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே அபிநந்தன் பதிலளித்தார். ராணுவம் தொடர்பான கேள்வி பாகிஸ்தானுக்குள் வந்த நோக்கம் மற்றும் என்ன ரக விமானத்தில் வந்தீர்கள் போன்ற கேள்விகளுக்கு' I am not supposed to tell you this' என்ற வார்த்தையை மட்டுமே அவர் பயன்படுத்தினார். இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த நிர்பந்தம் காரணமாக அபிநந்தனை இரண்டே நாள்களில் பாகிஸ்தான் விடுவித்துவிட்டது.


அபிநந்தன் பாகிஸ்தான் அதிகாரிக்கு அளித்த பதிலை வைத்து மீம் ஒன்று தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. இருவர் தேர்வு அறையில் அமர்ந்துகொண்டிருக்கின்றனர். முன்னால், இருப்பவர் பாகிஸ்தான் என்றும் பின்னால் இருப்பவர் அபிநந்தன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அபிநந்தனிடமிருந்து பிட் பேப்பரைக் கேட்க, அவரோ I am not supposed to tell you this' என்ற வார்த்தையை எழுதிக் கொடுத்து விடுவது போலவும் பாகிஸ்தான் கோபத்துடன் முறைப்பது போலவும் இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி இந்த மீமை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அபிநந்தனால் பாகிஸ்தானின் எஃப் -16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.