த லண்டன் பேஷன்ற் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்டது எப்படி?

த பெர்லின் பேஷன்ட்’ என அழைக்கப்பட்ட அமெரிக்கரான திமோதி பிரவுன் என்பவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டது.

ஹெச்.ஐ.வி வைரஸிலிருந்து மீண்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.   த லண்டன் பேஷன்ட் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்டது எப்படி?


ஹெச்.ஐ.வி என்னும் கொடிய வைரஸிடமிருந்து மானுட சமூகத்தை மீட்கப் போராடுவோருக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. ஆம்... லண்டனைச் சேர்ந்த ஒருவர், `ஸ்டெம்செல்’ மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். `தி லண்டன் பேஷன்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்தான், சர்வதேச அளவில் முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீக்கப்பட்ட உலகின் இரண்டாம் நபர். இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், `எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல் மாற்று அறுவைசிகிச்சை’ நடத்தப்பட்டது. அதன்பிறகு, 18 மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்தவரின் உடலிலிருந்து தற்போது முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு முன், `தி பெர்லின் பேஷன்ட்’ என அழைக்கப்பட்ட அமெரிக்கரான திமோதி பிரவுன் என்பவருக்கு இதே முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி வைரஸிலிருந்து மீண்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் நபருக்குச் சிகிச்சை அளித்தது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளருமான ரவீந்திரரவீந்திர குப்தா  குப்தா கூறுகையில், ``ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவருக்கு எலும்பு மஜ்ஜைகளை மாற்றி ஹெச்.ஐ.வி தொற்றைக் குணப்படுத்தியுள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்களை இவருக்குச் செலுத்தினோம். அதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. தற்போது அவரது உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிவிட்டது. இதை நாங்கள் `லேப் டெஸ்ட்’ மூலம் உறுதி செய்துள்ளோம்.

இந்தச் சிகிச்சையின்போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அனைவரது உடலும் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. எனவே, மிகவும் கவனமாகச் சிகிச்சை அளித்தோம். அவரது உடலில் தற்போது ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று இல்லை. ஆனால், அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. இன்னும் சில ஆண்டுகள் அவரது உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டி இருக்கிறது’’ என்றார் அவர்.

`ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று ஒருவரை ஒருமுறை பாதித்தால் அதை நீக்க முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும்’ என்பதுதான் பொதுவான மருத்துவ நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தற்போது அது தகர்ந்திருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.


இந்தத் திடீர் மரபணு மாற்றம் குறித்து மரபணு ஆய்வாளர் உத்ரா சடகோபனிடம் கேட்டோம்.உத்ரா சடகோபன்

``ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்ட இரண்டாவது நபர் இவர். இவருக்கு முன் பிரவுன் என்பவர் மீண்டிருக்கிறார். பிரவுன் ஹெச்.ஐ.வி-யால் பாதிப்பட்டிருந்தபோது, கூடுதலாகப் புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாகியிருந்தார். அதனால், அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை அளிக்கப்பட்டது. (எலும்பு மஜ்ஜையில்தான், ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும். இதுதான் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) அப்போது பிரவுனின் எலும்பு மஜ்ஜை முழுவதுமாக நீக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட மஜ்ஜைகள் பொருத்தப்பட்டன.

பொதுவாக, நம் அனைவரது உடலிலும் சிசிஆர்5 என்கிற ஜீன் இருக்கும். ஹெச்.ஐ.வி வைரஸை இந்த ஜீன்தான் வெள்ளை அணுக்களுக்குள் அனுமதிக்கும். ஒருசிலருக்கு மட்டுமே இந்த ஜீனில் சில மாற்றங்கள் இருக்கும். அது, ஹெச்.ஐ.வி வைரஸை அனுமதிக்காது. உலகின் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேருக்கு இந்த மரபணு மாற்றம் இருக்கும்.

நல்ல வாய்ப்பாக, பிரவுனுக்குப் பொருத்தப்பட்ட ஸ்டெம் செல்களின் சொந்தக்காரர் உடலில் உள்ள `சிசிஆர்5’ ஜீனில் அந்த மாற்றங்கள் இருந்துள்ளன. அதன் காரணமாக, அவரது ரத்த அணுக்களை, ஹெச்.ஐ.வி வைரஸால் தாக்க முடியவில்லை. மேலும், அவரின் உடலிலிருந்து  ஹெச்.ஐ.வி வைரஸ் முழுமையாக அழிந்துவிட்டது.

தற்போது, லண்டனைச் சேர்ந்த இந்த நோயாளிக்கும் அதே போன்ற ஜீன் உள்ளவரின் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள்தாம் பொருத்தப்பட்டது. கடந்த 18 மாதங்களாக எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாதபோதும், அவரின் உடலில் பாதிப்பு இல்லை. இத்தகைய சிகிச்சையால் இவர்கள் இரண்டு பேருக்கும் நன்மை கிடைத்துள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பயனளிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதுபோக, இத்தகைய சிகிச்சைகளின் பலன்கள் குறித்து உலகளவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு இத்தகைய சிகிச்சை தீர்வு தருமா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது’’ என்கிறார் உத்ரா சடகோபன்.

இதுகுறித்து, ஹெச்.ஐ.வி சிறப்பு மருத்துவர் சேகர் கூறியது.....

``மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்தி. பொதுவாக, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `ஹாட்கின்ஸ் லிம்போமா’ (Hodgkins Lymphoma) எனப்படும் ஒரு வகையான புற்றுநோய் ஏற்படும். பெர்லினைச் சேர்ந்த பிரவுன் என்பவருக்கு அது ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வேறொருவரிடமிருந்து எலும்பு மஜ்ஜை தானமாகப் பெற்று சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது அதே வழியில் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டு வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் இவர்.

ஹெச்.ஐ.வி பாதிப்பைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையிலிருந்து குணப்படுத்தலாம் என்ற நிலைக்குத் தற்போது வந்துள்ளோம். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இந்தச் செய்தி மிகவும் நம்பிக்கை தரும். எய்ட்ஸ் பாதிப்பில்லா உலகத்தை நோக்கிய பயணத்துக்கான முதல் அடியாக இது இருக்கும். இந்த சிகிச்சை முறை பக்க விளைவுகள் இல்லாமல், பொருளாதார ரீதியாக அதிக சுமை தராமல் இருந்தால், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் இது வரப்பிரசாதமாக அமையும்...’’  என்கிறார் சேகர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.