விபுலானந்த கல்லூரியின் களஞ்சிய அறையில் தீ விபத்து!!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபுலானந்த கல்லூரியின் களஞ்சிய அறையில் இன்று (சனிக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இதனை அவதானித்த பாடசாலை சமூகத்தினர் பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து மின்னொழுக்கினால் நேர்ந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து காரணமாக களஞ்சிய அறையில் இருந்த திருத்துவதற்குரிய கணிணிகள், கதிரைகள், சமையலுக்கு உரிய பாத்திரங்கள் என்பன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.