திபெத்தியர்களின் எழுச்சி தினம் - ஊட்டியில் நடைபெற்ற அமைதிப் பேரணி!

60-வது திபெத் எழுச்சி தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் ஏராளமான திபெத்தியர்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.


திபெத்தை சீனா ஆக்கிரமித்து, அதன்ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளது. சீனாவின் அடக்குமுறையால் திபெத் சீன ஆதிக்கத்தின்  கீழ்  வந்த பிறகு, பெரும்பாலானவர்கள் திபெத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அகதிகளாகக் குடியேறினர். இவர்கள், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வசித்துவருகின்றனர். தமிழ்நாட்டில் ஊட்டி, கன்னியாகுமரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்கள் நிறைந்த மாவட்டங்களில் அதிக அளவு வசித்துவருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 100-க்கும் மேற்பட்ட திபெத் குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இதனிடையே, திபெத்தில் சீனாவின் அத்துமீறல்களால் ஏராளமான திபெத்தியர்கள் இறந்துள்ளனர். திபெத்திற்கு சுதந்திரம் தரவேண்டியும் பல்வேறு போராட்டங்கள்  நடத்தபட்டுவருகின்றன.

 இந்நிலையில்,ஆண்டுதோறும் மார்ச் 10-ம் தேதி திபெத் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் பங்கேற்ற அமைதிப்  பேரணி ஊட்டியில் நடந்தது.  இதில் பங்கேற்ற திபெத்தியர்கள், சீனாவிற்கு எதிராகப் போராடி உயிரிழந்த திபெத்தியர்களின் நினைவாகவும், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்திற்கு சுதந்திரம் கிடைக்க இந்தியா உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.