வைத்தியசாலையை சீரமைக்குக!! கிளிநொச்சி மக்கள் வேண்டுகை!!
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அபிவிருத்திக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன், இது தொடர்பான மகஜரையும் ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில், ‘ கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் சேவைபெறும் இடங்களில் இரண்டாம் நிலையில் உள்ள இவ்வைத்தியசாலை அபிவிருத்தி மட்டத்தில் கீழ் நிலையில் உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட இவ்வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான வேலைகள் யாவும் பூர்த்தியாக்கப்பட்டபோதும், இதுவரை திறந்து வைக்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இதேவேளை தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற நோயாளர் விடுதிக்கான வேலைகளும் முழுமை பெறாமல் காணப்படுகின்றது.
எமது வைத்தியசாலையின் பொது விடுதி, அவசர சிகிச்சைப்பிரிவு, பிரசவ விடுதி என்பவற்றுக்கு மேலதிகமாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் நாளாந்த கிளினிக் போன்றவற்றிலும் இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே 24 மணிநேர சேவையை வழங்கி வருகின்றனர்.
இவ் வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர்களை நியமிப்பதற்கும் உபகரண வசதிகளை ஏற்படுத்தவும். ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளருக்கும் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை