முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படவே கூட்டமைப்பு விரும்புகின்றது – மாவை

தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கல்முனை பிரதேச சபை தொடர்பாக கடந்த நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டார். இதற்கு பதிலளிகாமல் எம்மால் இருக்க முடியாது.

இதன்காரணமாகவே அவருக்கு நாம் பதில் வழங்கினோம். இதன்போது அதற்கு பதில் வழங்கிய குறித்த உறுப்பினர் இதுகுறித்து எம்முடன் பேச வேண்டும் என தெரிவித்தார்.

அவ்வாறு பேசவேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து பேசாமல் இருந்திருக்க வேண்டும். நாம் தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே விரும்புகின்றோம்“ என குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.