குடிநீருக்காக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!!
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் குடிநீர் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுணதீவில் உள்ள தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் நீர்விநியோக பகுதியை வழிமறித்து இன்று (திங்கட்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உன்னிச்சைகுளத்திலிருந்து குறித்த நீர்வழங்கல் நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
ஆனால் இந்த திட்டத்தின் ஊடாக உன்னிச்சை உட்பட அதனை அண்மித்த பகுதிகளுக்கு நீர் கிடைப்பதில்லையெனவும் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டதுடன் மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குடிநீர் தேவையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், நீர்வழங்கல் அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் பிரகாஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் குறித்த பகுதியில் மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo“

.jpeg
)

கருத்துகள் இல்லை