முகநூல் அலப்பறைகள்..!

பொழுது போகவில்லையென்றே
பொழுதுபோக்காக
முகநூல் பக்கத்தினை நாடுவோம்
ஆனால் எங்கள்
பொழுகளெல்லாம் போய்விடும்
முகநூல் பக்கங்களிலே......!

பக்கம் பக்கமாக பலரின்
எக்கச்சக்க பக்கப்பதிவுகள்
பார்த்து வாசிக்க
நேரமிருக்காது-ஆனாலும்
பார்க்காமலே வாரியிறைப்போம்
விருப்ப குறியீடுகளை.....!

பதிந்த பதிவு
பொருள் பொதிந்தோ,சிதைந்தோ
விழுந்த நிழற்படம்
ஒளிர்ந்தோ, சரிந்தோ
அத்தனைக்கும் இடவேண்டும்
ஆகா...! அடடா....!.

ஆம்!
பொய் என்று தெரிந்தும்
அழகு....அற்புதம்
மெய்யுரைக்க முடியாமலே
அருமை, சிறப்பு
அத்தனையும்
அள்ளி உரைக்கும்
முகநூலே உலக விருப்பு

இதோ முகநூல். ஒன்றே...!

அற்புத ஊடகமாம்
அதிவேக ஊடகமாம்
ஆபத்தையும் விரைவாகத்
தேடியே தரும் பூடகமாய்

பணத்தை இழப்பதும் இங்கே
குணத்தை மறைப்பதும் இங்கே
முகத்தை மறந்து நாம் இங்கே
சுயத்தை தொலைப்பதும் இங்கே

முகநூல் ஒரு கேடி
இலாபம் அள்ளி கொடுக்கும்
மார்க்கிற்கு! பலகோடி

😀😂

................
ரேகா. சி

No comments

Powered by Blogger.