கால அவகாசத்தை நீடிக்கக் கூடாது கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான புளொட் !

இலங்கை அர­சுக்கு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை மேலும் கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது எனக் கோரிக்கை முன்­வைத்து ஐ.நா. ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பும் கடி­தத்­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான புளொட் கையெ­ழுத்­தி­டாது என்று அறி­ய­ மு­டி­கின்­றது.


இலங்கை அரசை பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றுக்கோ, ஐ.நா. பாது­காப்­புச் சபைக்கோ பாரப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் தரப்­புக்கு ஆத­ரவு வழங்­கத் தயா­ராக இருக்­கும்­வேளை, தற்­போது கைவ­சம் இருக்­கின்ற இலங்கை மீதான பன்­னாட்டு கண்­கா­ணிப்பு மேற்­பார்­வை­யைக் கைவி­டத் தயா­ராக இல்லை என்று புளொட் அமைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார்.
இலங்கை அர­சுக்கு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது எனக் கோரும் கடி­தம் ஒன்றை, ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் உள்­ளிட்ட தரப்­புக்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்கு ரெலோ அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.
அந்­தக் கட்­சி­யின் தலை­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் இந்­தக் கடி­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­தைத் தொடர்ந்து. தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் தலை­வர் வீ.ஆனந்­த­சங்­கரி, தமிழ் மக்­கள் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் நாய­கம் விக்­னேஸ்­வ­ரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் தலை­வர் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் ஆகி­யோர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர். இந்­தக் கடி­தத்­தில் புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­த­னும் கையெ­ழுத்­தி­டு­வார் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.
‘அந்­தக் கடி­தத்­தில் இன்­ன­மும் கையெ­ழுத்­தி­ட­வில்லை. இலங்கை அரசு மீதான பன்­னாட்டு மேற்­பார்­வை­யை­யும் நீக்­கி­விட்டு என்ன செய்­யப் போகின்­றோம். பன்­னாட்டு மேற்­பார்வை தொட­ரத்­தக்­க­தாக, இலங்­கையை கட்­டுப்­ப­டுத்­தக் கூடிய, ஐ.நாவின் உயர் மட்­டங்­க­ளின் ஊடாக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு யாரா­வது முயன்­றால் முழு­மை­யாக அதனை ஆத­ரிப்­போம். அதற்­காக பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­பதை கைவி­டச் சொல்ல முடி­யாது’ என்­றார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.