தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோல்வி!

பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் 149 மேலதிக வாக்குகளால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் தோல்வியடைந்தது.

சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 242 வாக்குகளும் எதிராக 391 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம்  149 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது, தெரேசா மே அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளைய தினம் ஒப்பந்தத்துடன் வெளியேறுவது தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பும் தோல்வியடையுமாக இருந்தால், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலைமை பிரித்தானியாவுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.