நீங்கள் பீனிக்ஸ் பறவை போன்ற மக்கள்!! விவேக்!!

அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையத்தின் மூலமாகவே இடம்பெறுவதாக நடிகர் விவேக் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் அழைப்பை ஏற்று மாநகரசபைக்குச் சென்றிருந்தார்.

அங்கு மாநகரசபை உறுப்பினர்கள், அலுவலகர்கள், ஊழியர்கள் என அனைவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் பொன்னாடை போர்த்தி நடிகர் விவேக்கை கௌரவித்தார். அத்தோடு மாநர முதல்வரினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மிக மிக அதிகமான வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து, பின்னர் மிக மோசமான துன்பங்களையும் சந்தித்து அதன்பின்னர், அதிலிருந்து மீண்டு நெருப்பிலிருந்து எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை போன்று எழுந்து வரும் நீங்கள் தான் உண்மையான வீரர்கள்.

அடுத்த ஒரு சாகாப்தத்தை உருவாக்குகின்ற உழைப்பாளிகள் நீங்கள். இன்னும் பத்து வருடங்களில் மற்றைய நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து நிற்பீர்கள்

மேலும் அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கமராக்கள் மூலமாகவும், கையடக்கத் தொலைபேசியில் எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவுமே இடம்பெறுகின்றன.

பெற்றோர்கள் வேலை பார்ப்பதன் நோக்கம் குடும்பத்தினை வளமாக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

குடும்பத்திலுள்ள குழந்தைகள் வேறு திசைக்குச் சென்றுவிட்டால் பெற்றோர்கள் கஷ்டப்படுவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“No comments

Powered by Blogger.