ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவிப்பு!!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அளப்பரிய சேவையாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மஹாபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, 01.01.2017 முதல் 30.09.2017 வரை ஓய்வுப்பெற்ற 140 ஊழியர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், முகாமைத்துவ பணிப்பாளர் கப்டன் அத்துல ஹெவாவித்தாரன, பணிப்பாளர் (வெளித் துறைமுகம்) அஹில் ஹெவாகிகன, பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) கலாநிதி பிரசன்ன லொகுகே, பணிப்பாளர் (மனித வளம்) பி. ரணதுங்க, பிரதான மனிதவள முகாமையாளர் நிர்மால் பொன்சேகா உள்ளடங்கலாக முகாமைத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துக்கொண்டார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.